×

குடும்ப தகராறில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை- கோட்டாட்சியர் விசாரணை!

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பெருமாள் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் சேலத்தில் உள்ள பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விஜயலட்சுமி, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த
 

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பெருமாள் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் சேலத்தில் உள்ள பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விஜயலட்சுமி, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், குணசேகரனுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த விஜயலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.