×

கொரோனாவால் கணவர் மரணம்… வேதனையில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை!

ஈரோடு ஈரோட்டில் கொரோனாவால் கணவர் உயிரிழந்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர், தனது 2 குழந்தைகளுடன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் திண்டல் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(67). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மகள் நித்யா ரம்யா. இவருக்கு, சென்னை மாங்காட்டை சேர்ந்த பாஸ்கருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகதி (11), யாதவ் கிருஷ்ணன் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் உள்ள
 

ஈரோடு

ஈரோட்டில் கொரோனாவால் கணவர் உயிரிழந்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர், தனது 2 குழந்தைகளுடன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(67). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மகள் நித்யா ரம்யா. இவருக்கு, சென்னை மாங்காட்டை சேர்ந்த பாஸ்கருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகதி (11), யாதவ் கிருஷ்ணன் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிந்து வந்த பாஸ்கருக்கு, கடந்த மே மாதம் 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் 9ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, நித்யா ரம்யா ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில், குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, கணவர் உயிரிழந்ததால் வாழ்வில் விரக்தியடைந்த நித்ய ரம்யா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதனையடுத்து, நேற்று மதிய உணவில் விஷ மாத்திரைகளை கலந்து மகள், மகனுக்கு கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டு உள்ளார். தொடர்ந்து, மூவரும் அறைக்கு சென்றுள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி, நேற்று மாலை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்தார்.

அப்போது, மூவரும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நித்யா ரம்யா, குழந்தைகள் மகதி, யாதவ் கிருஷணன் உயிரிழந்தனர். தகவல் அறிந்த திண்டல் தாலுகா போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.