கடன் தொல்லையால் இனிப்புக்கடை உரிமையாளர் தற்கொலை!

 

கடன் தொல்லையால் இனிப்புக்கடை உரிமையாளர் தற்கொலை!

தேனி

தேனி மாவட்டம் கோம்பையில் கடன் தொல்லை காரணமாக இனிப்புக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கோம்பை அடுத்த துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (40). இவர் அதே பகுதியில் இனிப்புக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், தமிழ்செல்வன் கடை வைப்பதற்காக பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதற்கு ஆரம்பத்தில் முறையாக வட்டியும் செலுத்தி வந்துள்ளார்.

கடன் தொல்லையால் இனிப்புக்கடை உரிமையாளர் தற்கொலை!

இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதால், கடந்த சில மாதங்களாக கடனுக்கு சரிவர வட்டி செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு, தொடர் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட தமிழ்செல்வன், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த கோம்பை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கலைச்செல்வனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.