திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? காங். கே.எஸ். அழகிரி விளக்கம்!

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? காங். கே.எஸ். அழகிரி விளக்கம்!

சட்டபேரவை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக தேர்தல் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. சட்டபேரவை தேர்தலில் எந்தெந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதெல்லாம் ஓரளவு யூகிக்கும் வகையிலேயே உள்ளது.

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? காங். கே.எஸ். அழகிரி விளக்கம்!

அதே சமயம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்குமா அதிமுக போன்ற சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. ஆனால் திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இதே கேள்வி திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசை பார்த்தும் எழுப்பப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? காங். கே.எஸ். அழகிரி விளக்கம்!
இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ” திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தான். ஸ்டாலினை முன்னிறுத்தி தான் 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டி என்பதை ஸ்டாலின் – ராகுல் காந்தி அறிவிப்பர் என்றும் எங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் ரஜினியையும் கமலையும் எங்கள் அணியில் வரவேற்போம்” என்றும் அவர் கூறியுள்ளார்.