“அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கார் கொடுக்க வேண்டும்” : பாஜக முருகன் அறிவிப்புக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!

“அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கார் கொடுக்க வேண்டும்” : பாஜக முருகன் அறிவிப்புக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!

2021 தமிழக சட்டமன்ற தேர்தலை தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் இன்னும் சில மாதங்களில் சந்திக்கவுள்ளன. இதனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றன. சட்டபேரவை தேர்தலில் எந்தெந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதெல்லாம் ஓரளவு யூகிக்கும் வகையிலேயே உள்ளது. அதே சமயம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்குமா அதிமுக போன்ற சில சந்தேகங்களும் எழுந்துள்ளன.

“அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கார் கொடுக்க வேண்டும்” : பாஜக முருகன் அறிவிப்புக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!

இத்தகைய சூழலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்;பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்ட தலைவருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும் நாம் கை காட்டுபவர்கள் தான் 2021ல் ஆட்சிக் கட்டிலில் அமர போகின்றனர் என்றும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

“அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கார் கொடுக்க வேண்டும்” : பாஜக முருகன் அறிவிப்புக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!

இந்நிலையில் அதிமுகவில் இன்னோவா கார் கொடுக்க வேண்டும் என்றால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் முருகனின் கார் பரிசு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.