சென்னையில் டாஸ்மாக்கை திறந்து கொரோனாவை பெருக்காதீர் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னையில் டாஸ்மாக்கை திறந்து கொரோனாவை பெருக்காதீர் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னைக்கு வெளியே ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பிறகுதான் வேகமெடுத்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சென்னையில் டாஸ்மாக்கை திறந்து கொரோனாவை பெருக்காதீர் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தற்போது சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இத்தகைய சூழலில் சென்னையில் நாளை முதல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் டாஸ்மாக்கை திறந்து கொரோனாவை பெருக்காதீர் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

முதற்கட்டமாக ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும் மது வாங்க வருவோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நெறிக்காட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!” என்று வலியுறுத்தியுள்ளார்.