கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.3,000 கோடி உடனடியாக தேவை : மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.3,000 கோடி உடனடியாக தேவை : மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய  ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்து கொண்டார். ஆந்திரா, பீகார், குஜராத், உ. பி, மேற்கு வங்காளம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.3,000 கோடி உடனடியாக தேவை : மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

இந்நிலையில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.3,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நவம்பர் வரை ரேஷனில் வழங்க 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு, மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழகத்துக்கு 9 ஆயிரம் சிறப்பு நிதி தேவைஎன்று காணொலி காட்சி மூலம் முதல்வர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி செலவனதால் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.