“எடப்பாடியார் என்றும் முதல்வர்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிவு!

 

“எடப்பாடியார் என்றும் முதல்வர்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிவு!

மதுரை பரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவை இருத் தலைவர் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே அடுத்த முதல்வர்” என்று பதிலளித்தார்.

“எடப்பாடியார் என்றும் முதல்வர்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிவு!

இந்நிலையில் செல்லூர் ராஜு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில், “எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டுகளத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே! ” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கால அவகாசம் 8 மாதமே உள்ள நிலையில் அதிமுக கட்சிக்குள் முதல்வர் வேட்பாளர் குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளன. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.