பள்ளி மாணவர்களுக்கு இலவச மொபைல் போன்! இங்கே அல்ல.. பஞ்சாப்பில்

 

பள்ளி மாணவர்களுக்கு இலவச மொபைல் போன்! இங்கே அல்ல.. பஞ்சாப்பில்

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. அதனால், அம்மாதத்தின் இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுக்க போக்குவரத்து, பெருங்கடைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் அளிக்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு இலவச மொபைல் போன்! இங்கே அல்ல.. பஞ்சாப்பில்

நாட்டின் பல பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் விகிதத்தைக் கணக்கில் கொண்டு அவ்வப்போது சில தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவிக்கின்றன. ஆயினும், பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்கும் முடிவுகளை எந்த மாநிலமும் எடுக்க வில்லை. காரணம், மாணவர்கள் கூட்டமாக கூடும்போது நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால்.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு மொபைல் அல்லது லேப்டாப் மூலன் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டன. இந்த முயற்சிக்குப் பலரின் எதிர்ப்புகள் இருந்தாலும் நீண்டகாலம் குழந்தைகள் கல்வியிலிருந்து விலகி இருந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும் எனும் கருத்தும் முன்வைக்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இலவச மொபைல் போன்! இங்கே அல்ல.. பஞ்சாப்பில்

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 11 மற்றும் 12 –ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மொபைல் போன் வழங்க உள்ளது. மாணவர்களின் கற்றல் எந்தச் சூழலிலும் தடைப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்ட்ராய்டு மொபைல் வசதியில்லாத மாணவர்களுக்கு பஞ்சாப் அரசு இலவச மொபைல் வழங்க 50,000 மொபைல்கள் தயாராக இருப்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

வரும் கல்வியாண்டுக்கு அரசுப் பள்ளிகளில் எவ்வித கட்டணமும் வசூல் செய்யக்கூடாது என்றும் பஞ்சாப் மாநில முதல்வர் துறை சார்ந்தவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைப் போல தமிழகத்தில் இலவச மொபைல் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று பலரும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.