தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.