ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு உடல்நல பரிசோதனை !

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு உடல்நல பரிசோதனை !

சென்னை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் ஆளுநர் நலமாக இருப்பதாக கூறப்பட்டது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு உடல்நல பரிசோதனை !

இதையடுத்து ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவர் அறிவுரைப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு உடல்நல பரிசோதனை !

இந்நிலையில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.