ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இல்லை! – ராஜ்பவன் அளித்த விளக்கம்

 

ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இல்லை! – ராஜ்பவன் அளித்த விளக்கம்

தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எஃப் ஊழியர்களுக்கு கொரோனா என்று வெளியான செய்தி தொடர்பாக ராஜ்பவன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இல்லை! – ராஜ்பவன் அளித்த விளக்கம்
தமிழக ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 90க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா என்று செய்தி வெளியானது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஆளுநர் மாளிகை பகுதியில் உள்ள சிலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதைத் தொடர்ந்து இதுவரை 147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இல்லை! – ராஜ்பவன் அளித்த விளக்கம்இவர்கள் அனைவரும் சுகாதாரத் துறை சார்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகைக்கு வெளிப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்கள். அதாவது ஆளுநர் மாளிகையின் வெளிப்புற பிரதான கேட் பகுதியில் (உள்புற பிரதான கேட் இல்லை) இவர்கள் இருப்பார்கள். இவர்கள் யாரும் ஆளுநருடனோ, ஆளுநர் அலுவலக மூத்த அதிகாரிகளுடனோ நேரடி தொடர்பு கொள்ளாதவர்கள்.

ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இல்லை! – ராஜ்பவன் அளித்த விளக்கம்இவர்களுக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து சென்றுள்ளனர். கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.