“முதல்வரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்க வேண்டும்” : அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கருத்து!

“முதல்வரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்க வேண்டும்” : அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கருத்து!

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கால அவகாசம் 8 மாதமே உள்ள நிலையில் அதிமுக கட்சிக்குள் முதல்வர் வேட்பாளர் குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளன. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

“முதல்வரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்க வேண்டும்” : அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கருத்து!

இந்நிலையில் மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது, “மினி பொதுத்தேர்தல் என கருதப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் இபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வெற்றி பெற்றோம். இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோரை முன்னிறுத்தியே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதிமுகவின் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓபிஎஸ் வழிகாட்டுதல் படியும் அதிமுக செயல்படும். எளிமையின் அடையாளமான முதல்வர் அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்துள்ளார்” என்று கூறிய அவர், ” முதல்வரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும்  இந்த அரசு நிலைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் நிலையான அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

“முதல்வரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்க வேண்டும்” : அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கருத்து!

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜு , “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே அடுத்த முதல்வர்” என்று தெரிவித்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே அடுத்த முதல்வர், எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.