அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

 

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளாக விளங்கும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை துவங்கி விட்டன.

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

இதில் திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின் என்பது உறுதியான நிலையில் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் முதல்வர் பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இது குறித்து கேட்கப்படும் போதெல்லாம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளோ கட்சியே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று கூறி வருகின்றனர்.

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

இந்நிலையில் மதுரை பரவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவை இருத் தலைவர் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோஅவரே அடுத்த முதல்வர். சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது ” என்று பதிலளித்துள்ளார்.