வேலூர் மாவட்டத்தில் மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வாய்ப்பு!

வேலூர் மாவட்டத்தில் மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வாய்ப்பு!

அந்த வகையில் வேலூரில் மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,867 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வாய்ப்பு!

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் பகுதியில் பாதிப்பு அதிகமாகி வருவதால் ஆகஸ்ட் மாதமும் பொது முடக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.