பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க உத்தரவு!

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. கொரோனா தீவிரமாகும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என்றும் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க உத்தரவு!
இந்த நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தின் முட்டை , நாப்கின் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு முறையாக அளிக்க தமிழக அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க உத்தரவு!

இந்நிலையில் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத் திட்டத்தை தொடர தமிழக அரசு ஆணைபிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களான அரிசி, பருப்பு தரப்படும் என்றும் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு இந்த அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது.