‘விநாயகர் சிலை விவகாரம்’ இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜகவின் நிலைப்பாடும்: எல்.முருகன் பேட்டி!

‘விநாயகர் சிலை விவகாரம்’ இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜகவின் நிலைப்பாடும்: எல்.முருகன் பேட்டி!

தமிழகத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கவில்லை என்றால், தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் 1.5 லட்சம் சிலையை நிறுவி வழிபடுவோம் என இந்து முன்னணி நிர்வாகி சுப்பிரமணியம் கூறினார்.

‘விநாயகர் சிலை விவகாரம்’ இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜகவின் நிலைப்பாடும்: எல்.முருகன் பேட்டி!

இந்து முன்னணியின் இந்த நிலைப்பாடு சர்ச்சையை கிளப்பி நீதிமன்றம் வரை சென்றது. இது தொடர்பாக எழுந்த வழக்கில், பொது இடங்களில் சிலை வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பொது இடங்களில் சிலை வைக்க வேண்டாம், வீடுகளிலேயே வைத்து கொண்டாடுங்கள் என்று அரசு இன்று காலை மீண்டும் அறிவுறுத்தியது.

‘விநாயகர் சிலை விவகாரம்’ இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜகவின் நிலைப்பாடும்: எல்.முருகன் பேட்டி!

இந்த நிலையில் விநாயகர் சிலை விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக்குக்கு அனுமதி அளித்த தமிழக அரசு விநாயகர் சிலை வைக்க ஏன் அனுமதி வழங்கவில்லை என்றும் தமிழக அரசின் நடவடிக்கை புரியாத புதிராக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க மட்டுமே தாங்கள் அனுமதி கேட்பதாகவும் ஊர்வலத்துக்கு இல்லை என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜகவின் நிலைப்பாடும் என தெரிவித்தார். மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசு ஏன் அனுமதி வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.