அ.தி.மு.க-வுக்கு முழுக்கா? – மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விளக்கம் அளித்த முன்னாள் எம்.பி!

அ.தி.மு.க-வுக்கு முழுக்கா? – மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விளக்கம் அளித்த முன்னாள் எம்.பி!

அ.தி.மு.க-வில் ஓரம்கட்டப்பட்ட மாநிலங்களவை முன்னாள் எம்.பி மைத்ரேயன் பா.ஜ.க-வில் இணைப் போகிறார் என்று வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக வலம் வந்தவர் டாக்டர் மைத்ரேயன். இவர் முன்பு பா.ஜ.க-வில் இருந்தவர். ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் இணைந்து தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவைக்கு ஜெயலலிதாவால் அனுப்பி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மைத்ரேயன் டம்மியாக்கப்பட்டார்.

அ.தி.மு.க-வுக்கு முழுக்கா? – மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விளக்கம் அளித்த முன்னாள் எம்.பி!
தனக்கு மீண்டும் எம்.பி-யாக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கட்சிக்குள் நிலவிய போட்டி காரணமாக இவர் ஒதுக்கப்பட்டார். இதனால் பிரிவுபச்சாரத்தின் போது மாநிலங்களவையில் கண்ணீர்விட்டு அழுதார் மைத்ரேயன். தொடர்ந்து அ.தி.மு.க-வில் மதிப்பு இல்லை என்ற நிலையில் பா.ஜ.க பக்கம் மீண்டும் செல்வார் என்று பேச்சு கிளம்பியது.

அ.தி.மு.க-வுக்கு முழுக்கா? – மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விளக்கம் அளித்த முன்னாள் எம்.பி!
அதற்கு ஏற்றார்போல தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேல் பூஜை அறிவித்த போது, தன்னுடைய வீட்டு சமையல் அறையில் வேல் பூஜை செய்து அந்த படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் மைத்ரேயன். இதனால் அவர் மீண்டும் பா.ஜ.க செல்வது உறுதி என்று அ.தி.மு.க-வினரே அடித்துக் கூறினர்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது, “நான் தற்போது அ.தி.மு.க-வில் மகிழ்ச்சியாக உள்ளேன். முன்பு இருந்த மன வருத்தங்கள் தற்போது மறைந்துவிட்டன. கட்சி மாறப் போவதாக வெளியான தகவல் தவறானது. இதற்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது சரியாக இருக்காது. நான் குறிப்பிட்ட தேதியில் பா.ஜ.க-வில் இணையப் போவதாக வதந்தி பரப்புகின்றனர். அந்த நாள் வந்தால் தானாகவே நான் கட்சி மாறவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார்.

அ.தி.மு.க-வுக்கு முழுக்கா? – மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விளக்கம் அளித்த முன்னாள் எம்.பி!
அ.தி.மு.க சசிகலா, ஓ.பி.எஸ் அணி என இரண்டாகப் பிரிந்த போது, ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்தவர் மைத்ரேயன். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று அவருக்கு வாக்கு கொடுத்தலாகப்பட்டதாகக் கூறுகின்றனர். அதனால்தான் வருத்தம் எல்லாம் மறைந்து மனநிறைவாக அதற்கான பணிகளில் இறங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.