மழை காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் : அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் விளக்கம்!

மழை காரணமாக தொற்று நோய்  பரவும் அபாயம்  : அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் விளக்கம்!

கடந்த ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று 20 லட்சத்தை நெருங்குகிறது. 13.28 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,699 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மழை காரணமாக தொற்று நோய்  பரவும் அபாயம்  : அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் விளக்கம்!

அதே சமயம் தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் டெங்கு போன்ற நோய் தொற்று பரவ வாய்ப்புண்டு. இதனால் டெங்கு பாதிப்பை தடுக்கும் வகையிலும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மழை காரணமாக தொற்று நோய்  பரவும் அபாயம்  : அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் விளக்கம்!

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மழை காரணமாக தொற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றும் “அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றும் கூறியுள்ளார்.