மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் : திண்டுக்கல்லில் முதல்வர் பேச்சு

மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் : திண்டுக்கல்லில் முதல்வர் பேச்சு

தமிழகத்தில் கொரோனா படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல முதல்வர் பழனிசாமியும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அம்மாவட்டத்தில் ரூ.2.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் : திண்டுக்கல்லில் முதல்வர் பேச்சு

அதன் பிறகு உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் சிறப்பான பணியை மேற்கொண்ட ஆட்சியர், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். தொடர்ந்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும் என்றும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் அரசின் அறிவுரையை கடைபிடித்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் கூறினார். மேலும், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை விலையில்லா அரிசி வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.