நேற்று ஒரேநாளில் ரூ.177 கோடிக்கு மதுவிற்பனை : இன்று முழு ஊரடங்கால் குவிந்த குடிமகன்கள்!

நேற்று ஒரேநாளில் ரூ.177 கோடிக்கு மதுவிற்பனை :  இன்று முழு ஊரடங்கால் குவிந்த குடிமகன்கள்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் ரூ.177 கோடிக்கு மதுவிற்பனை :  இன்று முழு ஊரடங்கால் குவிந்த குடிமகன்கள்!

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு வந்த நிலையில், அதனை ஈடுகட்ட கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா பரவலை தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று ஒரேநாளில் ரூ.177 கோடிக்கு மதுவிற்பனை :  இன்று முழு ஊரடங்கால் குவிந்த குடிமகன்கள்!

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் நேற்று ஒரேநாளில் 177 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரையில் 40.75 கோடி ரூபாய், திருச்சியில் 40.39 கோடி ரூபாய் ,சேலத்தில் 39.40 கோடி ரூபாய் மற்றும் கோவையில் 35.90 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.