‘டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு’.. மாவட்ட நிர்வாகம் அதிரடி!

 

‘டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு’.. மாவட்ட நிர்வாகம் அதிரடி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு’.. மாவட்ட நிர்வாகம் அதிரடி!

இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியான கொரோனா தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு வந்த நிலையில், அதனை ஈடுகட்ட கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் உட்பட அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.