கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. 190 பேர் பயணித்த இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் இருந்தனர்.

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

கோழிக்கோடு டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 120 பேர் லேசான காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

இந்நிலையில் கோழிக்கோடு விமான விபத்து குறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளிதரன் உடன் டி.ஜி.சி.ஏ குழு விமான நிலையம் வந்துள்ளது. இதன் காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு கோழிக்கோடு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கோழிக்கோடு வரும் விமானங்கள் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.