கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

 

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 191 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

10 கைக்குழந்தைகள், 6 பணியாளர்கள், 2 விமானிகள், 184 பயணிகள் என 191 பேருடன் பயணித்த ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானம் மூலம் கேரளா வந்தது. அந்த விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் விபத்து ஏற்பட்டது. சக்கரத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இரண்டாக உடைந்தும் விமானம் தீப்பிடிக்கவில்லை. கேரளாவில் மழை பெய்துகொண்டிருப்பதால் இந்த விபத்தில் விமானம் தீப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

5 பேரின் உடல்கள் கோழிக்கோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் இரக்கலை தெரிவித்துள்ளார்.