கன்னியாகுமரியில் 5 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் மேலும் 217 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,018 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் இன்று 6 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

Most Popular

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான புதிய அமைச்சரவை இன்று அமைகிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து இலங்கை...

என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு 3600 முதல் 4000 ரூபாய் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.3600 முதல் ரூ.4000 வரை...

பயணிகள், புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு! 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கம்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையிலும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கையை தெற்கு ரயில்வே நீட்டித்து அறிவித்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது....

18 பேர் பலியானதன் எதிரொலி: கோழிக்கோட்டில் பெரிய விமானங்கள் தரையிறங்க தடை

கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி இரவு துபாயில் இருந்து 191 பேருடன்...
Do NOT follow this link or you will be banned from the site!