’3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்பட வில்லை’ பெரியார் பல்கலைக்கழகம் பற்றி திமுக க.பொன்முடி

 

’3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்பட வில்லை’ பெரியார் பல்கலைக்கழகம் பற்றி திமுக க.பொன்முடி

சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழகம் புகழ்பெற்றது. அங்கு நிர்வாகச் சீர்கேடுகள் நடப்பதாக உயர்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் க.பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டு அறிக்கையில், ’திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கல்விப் புலத்தில் சிறப்பாக விளங்கிய பெரியார் பல்கலைக்கழகம், அண்மைக் காலமாக ஊழலின் உறைவிடமாக மாற்றப்பட்டு, பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது. இதனால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் – மாணவர்கள் உள்ளிட்டோர் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

’3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்பட வில்லை’ பெரியார் பல்கலைக்கழகம் பற்றி திமுக க.பொன்முடி

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் – விரிவுரையாளர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என, பாதிக்கப்பட்டோர் தங்கள் அவல நிலையை எடுத்துரைத்துள்ளனர்.

பணிநியமனம் – பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட அனைத்து வகையிலும் நிர்வாகச் சீர்கேடுகளால் தடுமாறும் பல்கலைக்கழகத்தைச் சீர்படுத்தி, ஊழலை ஒழித்து, ஊதியமின்றித் தவிக்கும் உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் கிடைத்திட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.