கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா!

 

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் முன் களப்பணியாளர்கள் ஆக பணிபுரிந்து வந்த காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், செய்தியாளர்கள், என அனைத்துத் தரப்பினரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தித்தாள் மற்றும் காட்சி ஊடகத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த ராமநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா!

அதே போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவல் உதவி ஆய்வாளர் பழனியும் உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதியே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கும் கொரோனா உறுதியானது. அதனால் அவர் கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஆட்சியர் பொன்னையா கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அவரை பூங்கொத்து கொடுத்து சார் ஆட்சியர் மற்றும் எஸ்பி வரவேற்றுள்ளனர். அதன் பின்னர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதால், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.