தேனியிலும் இன்று முதல் முழு பொது முடக்கம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 

தேனியிலும் இன்று முதல் முழு பொது முடக்கம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதனை கருத்தில் கொண்ட அரசு, ஊரடங்கைக் கட்டுப்பாடுகளுடன் ஓரளவு தளர்த்தியது. அதனால் நாளொன்றுக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, பன்மடங்காக அதிகரித்தது. இதனையடுத்து கொரோனா அதிகமாகப் பரவியுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று முதல் மதுரை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.

தேனியிலும் இன்று முதல் முழு பொது முடக்கம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்த நிலையில் தேனி மாவட்டத்திலும் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.