காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சிய பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சிய பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ,4245ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 2,693 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,1497 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 55ஆக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சிய பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் முன் களப்பணியாளர்கள் ஆக பணிபுரிந்து வந்த காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், செய்தியாளர்கள், என அனைத்துத் தரப்பினரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தித்தாள் மற்றும் காட்சி ஊடகத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த ராமநாதனுக்கு கடந்த 4ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராமநாதன் இன்று உயிரிழந்தார். இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவல் உதவி ஆய்வாளர் பழனியும் இன்று உயிரிழந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு இன்று மதியம் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.