ஆதாயத்திற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் காட்டம்!

ஆதாயத்திற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் காட்டம்!

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் பாஜக -அதிமுக கூட்டணியில் சில சாதகமற்ற சூழல் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆதாயத்திற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் காட்டம்!

அதற்கு ஏற்றார்போல நேற்று கமலாலயத்தில் பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது பேசும் பொருள் ஆனதைத் தொடர்ந்து இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

ஆதாயத்திற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் காட்டம்!

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி ‘அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன’ என்று கூறினார். மேலும் ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், பாஜக -அதிமுக கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் முருகனோ அல்லது பாஜக மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டா தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் விபி துரைசாமிக்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.