மூணாறு நிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்வு !

மூணாறு நிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்வு !

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் 43 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூணாறு நிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்வு !

இதையடுத்து 4 வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், மோப்ப நாய் உதவியுடன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்று கேரளாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அம்மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மூணாறு நிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்வு !

இந்நிலையில் மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களில் மேலும் 4 பேர்உடல் மீட்கப் பட்ட நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

மூணாறு நிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்வு !

கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்களே பெரும்பாலும் நிலச்சரிவில் உயிரிழந்திருப்பதால் இறந்தவர்கள் உடலைசொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.