திமுகவிலிருந்து விலக காரணம் இதுதான்… அதிருப்தி எம்எல்ஏ கு. க. செல்வம் பரபரப்பு தகவல்!

 

திமுகவிலிருந்து விலக காரணம் இதுதான்… அதிருப்தி எம்எல்ஏ கு. க. செல்வம் பரபரப்பு தகவல்!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் கட்சி மீதான அதிருப்தியில் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார். இதற்கு காரணமாக பள சொல்லபட்டாலும் முக்கிய காரணமாக அவருக்கு சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி தராததால் அவர் திமுக மேலிடம் மீது கடுப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் டெல்லியில் பாஜக மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டாவுடன் சந்திப்பு, கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை என அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தார். இதை தொடர்ந்து கு. க. செல்வத்தை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

திமுகவிலிருந்து விலக காரணம் இதுதான்… அதிருப்தி எம்எல்ஏ கு. க. செல்வம் பரபரப்பு தகவல்!

இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்எல்ஏ கு. க. செல்வம், “திமுகவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தினால் விலக முடிவு செய்தேன். திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டேன். வயதாகிவிட்டது; உடல் நிலை சரி இல்லை ;பணம் இல்லை என திமுகவில் என்னை ஒதுக்கினார்கள். நான் கட்சியிலிருந்து விலகுவதற்கு காரணம், மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது அல்ல; குடும்ப அரசியல் காரணமாக விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.

திமுகவிலிருந்து விலக காரணம் இதுதான்… அதிருப்தி எம்எல்ஏ கு. க. செல்வம் பரபரப்பு தகவல்!

இதை அறிந்த திமுகவினரோ குடும்ப அரசியல் நடப்பது இப்போது தான் குக செல்வத்திற்கு தெரிந்ததோ என்று விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ அதிமுக, அமமுக போன்ற கட்சியிலிருந்து விலகி பலர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது கட்சி மேலிடத்திற்கு நெருக்கமான எம்எல்ஏ செல்வம் விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.