திமுகவில் இருந்து நீக்கினாலும் கவலை இல்லை : திமுக எம்எல்ஏ கு.க செல்வம் பேட்டி!

 

திமுகவில் இருந்து நீக்கினாலும் கவலை இல்லை : திமுக எம்எல்ஏ கு.க செல்வம் பேட்டி!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக தனக்கு பதவி தரப்படாதால் அவர் அதிருப்தியில் உள்ளதாகவும் அதனால் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி சென்ற கு.க செல்வம், ஜெ. பி. நட்டாவை சந்தித்தார்.திமுகவில் இருந்து நீக்கினாலும் கவலை இல்லை : திமுக எம்எல்ஏ கு.க செல்வம் பேட்டி!

இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தின் முடிவில் பாஜகவில் இணைந்த குக செல்வதை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி, கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்தை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதால் திமுகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து பாஜக தலைமையிடமான கமலாலயத்துக்கு சென்ற திமுக எம்.எல்ஏ கு.க செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவில் இருந்து என்னை நீக்கினாலும் கவலை இல்லை என்றும் தமிழகத்தில் பிள்ளைகள் அரசியல் நடப்பதாகவும் கூறினார். மேலும், எம்எல்ஏ என்ற அடிப்படையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு லிஃப்ட் கேட்டு நட்டாவை சந்தித்தேன் என்றும் தெரிவித்தார்.