நான் பாஜகவில் இணையவில்லை – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

 

நான் பாஜகவில் இணையவில்லை – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சரி, அவர் மறைவுக்குப் பிறகும் சரி ஒரு எம்.எல்.ஏ- கூட அ.தி.மு.க-வை விட்டு விலகவில்லை. உட்கட்சி பூசல் இருந்தாலும் அ.தி.மு.க என்ற நிலையில் எம்.எல்.ஏ-க்கள் ஒன்றாகவே இருந்தனர். ஆனால் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரே கட்சி மாறிவிட்டார். இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் இன்று பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக செய்தி வௌியானது. இதைத் தொடர்ந்து தி.மு.க தலைமை திடீர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இவை எல்லாம் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் சோர்வையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.

நான் பாஜகவில் இணையவில்லை – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

இதனிடையே திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டாவின் இல்லத்திற்கு இன்று மாலை சென்றார். அவருடன் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ், தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் ஆகியோரும் சென்றிருந்தனர். ஜெ.பி. நட்டாவுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், திமுகவில் உள்கட்சி தேர்தலை மு.க.ஸ்டாலின் முறையாக நடத்தவேண்டும் என்றும், நான் பாஜகவில் இணையவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.