பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

 

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பரிசோதனைகள் அதிகரிப்பு, பிளாஸ்மா சிகிச்சை மையம், நடமாடும் முகாம் என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் விளைவாக தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் உட்பட அனைவரும் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும் குணமடைபவர்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது. விரைவில் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனிடையே கொரோனா நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுள் தமிழமும் ஒன்று. அதனால் கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு, கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் 8 மாநில முதல்வர்கள் பங்கேற்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும் பங்கேற்க உள்ளார்.