“திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம்” : ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

“திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம்” : ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம்” : ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

சட்டசபையில் நேற்று கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து பேசிய அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர். காரணம் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக குற்றவாளி சயான் அளித்த வாக்குமூலத்தில் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. இதை கண்டித்தே அதிமுக வெளிநடப்பு செய்தது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

“திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம்” : ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, “கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முறைகேடு உள்ளது. எண்ணிக்கையை மறைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் வீடு ,வீடாக சென்று காய்ச்சல் சளி பரிசோதனைகளை நடத்தினோம். நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிய திமுகவினர் குறித்து பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தீர்ப்பு கூறி விட்டது. திமுக பொய்யான வாக்குறுதி தந்துள்ளது. திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம். திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது” என்றார்.