பிறந்தநாளை செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்

 

பிறந்தநாளை செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்

மக்களவை தேர்தலுக்குப் பிறகு சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லவிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இடையில் சிறு உடல் பிரச்னை காரணமாக இங்கேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் இருந்தவாறே கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

பிறந்தநாளை செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்

அந்த வகையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடைபிடித்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கான பல்வேறு உதவிகளை ஆண்டுதோறும் தேமுதிகவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்பி எடுத்து அவரின் 68 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் விஜயகாந்த்தின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.