உதயநிதியின் விநாயகர் சிலை புகைப்படம்: தேர்தலுக்காக இந்துக்களை சமாதானப்படுத்த நடத்தும் நாடகம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

உதயநிதியின் விநாயகர் சிலை புகைப்படம்: தேர்தலுக்காக இந்துக்களை சமாதானப்படுத்த நடத்தும் நாடகம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, “சினிமா படப்பிடிப்பு பொருத்தவரை நேற்றுதான் மத்திய அரசு வழிகாட்டுதல் முறைகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசனை நடத்தி, உரிய வழிமுறைகளை ஏற்படுத்தி சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படும். ட்விட்டரில் விநாயகர் சிலை படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருப்பது திமுகவினருக்கு ஏற்பட்டுள்ள காலத்தின் கட்டாயம், இந்துக்களை இழிவாக பேசுவதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் வழியில் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தி வருகிறது.

உதயநிதியின் விநாயகர் சிலை புகைப்படம்: தேர்தலுக்காக இந்துக்களை சமாதானப்படுத்த நடத்தும் நாடகம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

சிறுபான்மை மக்களை கவர வேண்டும் என்பதற்காக அவர்களை திமுக ஏமாற்றி வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு அதிகமான உதவிகள் செய்தது அதிமுக தான். இந்துக்கள் உணர்வுகளைப் புரிந்து யார் மனதையும் புண்படுத்த கூடாது என்ற வகையில் மத நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்வது அதிமுக தான், அதிமுகவின் கொள்கையும் அதுதான், மக்கள் திருநீறு பூசுவதை கூட‌ சாம்பலைப் பூசுகிறார்கள் என்று பலமுறை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ராமர் என்ன பாலம் கட்டினார், ‌ ராமர் என்ன பொறியாளரா, கட்டிட வல்லுனரா என்றும் விமர்சனம் செய்தவர்கள் திமுகவினர். ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து கேவலமாக கவிதை எழுதினார். இதனை பலரும் எதிர்த்த பின்னர் அதில் அடக்கத்தை காட்டினார்கள்.

கந்த சஷ்டி கவசம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஒட்டு மொத்த இந்து மக்களும் கொதித்து எழுந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் திமுகவினர் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார்கள். தவிர அது உண்மையான சொரூபம் அல்ல, தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சி திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் ,காலம் காலமாக இந்துக்களை பழித்து வருவது திமுகவினருக்கு வாடிக்கை. அதிமுகவில் இருப்பவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சரியான கருத்தை தான் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.