விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய துணை முதல்வர் ஓபிஎஸ்

 

விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய துணை முதல்வர் ஓபிஎஸ்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய துணை முதல்வர் ஓபிஎஸ்

இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், “பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ எனது உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.