“திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நன்முத்திரை பதித்த விஜயகாந்த்” – முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

 

“திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நன்முத்திரை பதித்த விஜயகாந்த்” – முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

“திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நன்முத்திரை பதித்த விஜயகாந்த்” – முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், “திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி நன்முத்திரை பதித்து வரும் விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி, உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.