ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்குள் செல்ல முயன்ற தீபக்

 

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்குள் செல்ல முயன்ற தீபக்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வீட்டில்தான் வசித்துவந்தார். அலுவகக் கோப்புகள் அங்கேயே பார்க்கப்பட்டதும் உண்டு. அந்த வீட்டில்தான் அவரின் தோழி சசிகலாவும் இருந்தார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 – தேதி சென்னை அப்போல்லா மருத்துவமனையில் உயிரிழந்தார். அதன்பிறகு சசிகலா அந்த வீட்டில் இருந்தார். அவருக்கு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அளிக்கப்பட்டதும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்குள் செல்ல முயன்ற தீபக்

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து சர்ச்சையாவது வழக்கம். தமிழ்நாடு அரசு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை மாற்றுவதற்கு திட்டமிட்டது. அதனபடி கடந்த மே மாதம் அந்த வீடு நினைவு இல்லமாக்கும் அவசரச் சட்டத்தையும் பிறப்பித்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. அவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் போயஸ் கார்டன் வீட்டுக்குத்தான் செல்வார் எனச் சிலரால் கூறப்பட்டது.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்குள் செல்ல முயன்ற தீபக்

போயஸ்கார்டன் வீட்டைப் பற்றிய இத்தனை விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இன்று போயஸ் கார்டன் வீட்டுக்குள் செல்ல முயன்றிருக்கிறார். ஆனால், காவல் துறையினர் அனுமதிக்க வில்லை. ‘ஜெயலலிதாவின் உறவின் வாரிசுகளாக தன்னையும் தீபாவையும் தான் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது’ என காவல் துறையினரிடம் கூறினார். ஆனாலும் காவல் துறையினர் தீபக் போயஸ் கார்டன் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வில்லை. அதனால், சிறிதுநேரம் அங்கிருந்து விட்டு புறப்பட்டார் தீபக்.