தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்.. நீதிமன்றம் தீர்ப்பு

 

தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்.. நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், தங்களை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்று தீபக் மற்றும் தீபா மனு அளித்திருந்தனர்.

தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்.. நீதிமன்றம் தீர்ப்பு

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் கடந்த 27 ஆம் தேதி பரிந்துரைத்தது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு இரண்டாம் நிலை வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நியமித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவில் இன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.