`நாங்கள்தான் ஜெ.வின் நேரடி வாரிசுகள்; போயஸ் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கக்கூடாது!’- தீபா- தீபக் திடீர் மனு

`நாங்கள்தான் ஜெ.வின் நேரடி வாரிசுகள்; போயஸ் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கக்கூடாது!’- தீபா- தீபக் திடீர் மனு

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ஜெ.தீபா, தீபக் தான் வாரிசுதாரர்கள். அவர்களின் அனுமதியின்றி நினைவு இல்லம் அமைக்கக்கூடாது என்று கிண்டி கோட்டாட்சியரிடம் தீபா, தீபக் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

`நாங்கள்தான் ஜெ.வின் நேரடி வாரிசுகள்; போயஸ் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கக்கூடாது!’- தீபா- தீபக் திடீர் மனு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை அரசுடமையாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் தங்களுக்குதான் சொந்தம் என்று தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் நேரடி வாரிசுகள் என தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களை எடுப்பது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நிவாரணம் பெறலாம் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

`நாங்கள்தான் ஜெ.வின் நேரடி வாரிசுகள்; போயஸ் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கக்கூடாது!’- தீபா- தீபக் திடீர் மனு

இந்நிலையில், போயஸ் கார்டனில் ஒரு பகுதியை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா, தீபக் ஆகியோர் இன்று சென்னை கிண்டி கோட்டாட்சியர் என்.லெட்சுமியிடம் மனு அளித்தனர். ஜெ.தீபா, தீபக் சார்பில் வழக்கறிஞர்கள் சுதர்சன், சுப்பிரமணி ஆகியோர் இந்த மனுக்களை அளித்தனர். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ஜெ.தீபா, தீபக் தான் வாரிசுதாரர்கள். அவர்களின் அனுமதியின்றி நினைவு இல்லம் அமைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

`நாங்கள்தான் ஜெ.வின் நேரடி வாரிசுகள்; போயஸ் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கக்கூடாது!’- தீபா- தீபக் திடீர் மனு

ஜெயலலிதாவின் நேரடி வாரிகள் அவரது அண்ணன் மகள் தீபா, தீபக் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்க தீபாவும், தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருவது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.