80 % மதிப்பெண் பெற்ற கூலித்தொழிலாளியின் மகள் – மத்திய அமைச்சர் பாராட்டு

 

80 % மதிப்பெண் பெற்ற கூலித்தொழிலாளியின் மகள் – மத்திய அமைச்சர் பாராட்டு

ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில் பூஜா ராணி எனும் மாணவி 80.4 சதவிகித மதிப்பெண் பெற்று எல்லோரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார்.

ஹரியானாவைச் சேர்ந்தவர் கைலாஷ் குமார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரின் மனைவியின் கூலித்தொழிலாளிதான். அவர் தன் வேலை முடிந்த நேரத்தில் பல வீடுகளில் வேலை செய்துவருகிறார்கள்/ கைலாஷ் குமார் தனது மனைவி மற்றும் மூன்று நான்கு மகளுடன் மிகச் சிறிய வீட்டில் வசித்துவருகிறார். மிக குறைந்த வருமானமே வரும் இவர் தம் குடும்பத்தினருக்கு போதுமான உணவளிப்பதே பெரிய சவாலான காரியம். இந்தக் குடும்பச் சூழலிலிருந்து வந்த பூஜா ராணி தேர்வில் பலரும் பாராட்டும் விதமாக மதிப்பெண் பெற்று வியக்க வைத்திருக்கிறார்.

80 % மதிப்பெண் பெற்ற கூலித்தொழிலாளியின் மகள் – மத்திய அமைச்சர் பாராட்டு

வெள்ளிக்கிழமை அன்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில், ரோஹ்டக் காலனியில் உள்ள காந்தி பள்ளியில் படிக்கும் மாணவி பூஜா ராணி பூஜா ராணி 80.4 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

தனது வெற்றியைப் பற்றி பூஜா சொல்லும்போது, ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன் காந்தி பள்ளியில்தான் என் கல்வியைத் தொடங்கினேன். வீட்டில் படிக்கும் சூழல் இல்லாததால் தெரு விளக்கு வெளிச்சத்தில்தான் பாடங்களைப் படிப்பேன். நான் அதிகளவு மதிப்பெண் பெற்றிருப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் என நம்புகிறேன்’ என்கிறார்.

மேலும், ‘நான் 80 சதவிகித பெண் பெற்றது பெருமையாக இருக்கிறது. என்னை விடவும் மகிழ்ச்சியாக இருப்பது என் அப்பா, அம்மாதான். குறிப்பாக, என் அம்மா பல வீடுகளில் பாத்திரம் கழுவி என்னைப் படிக்க வைத்தார்’ என்று நெகிழ்ச்சியோடு பதிவு செய்கிறார் பூஜா.

80 % மதிப்பெண் பெற்ற கூலித்தொழிலாளியின் மகள் – மத்திய அமைச்சர் பாராட்டு

பூஜா ராணி பெற்ற மதிபெண்களைப் பாராட்டி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட் பெய்திருக்கிறார்.

“பத்துக்கு பத்து அளவுள்ள வீட்டில் இருந்துகொண்டு 80.4 சதவிகித மதிப்பெண் பெற்றிருப்பது முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிருபித்திருக்கிறார். பூஜா பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்’ என்று பாராட்டியிருக்கிறார்.