‘தேர்வுகள் அவசியம்’ மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

 

‘தேர்வுகள் அவசியம்’ மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகளவில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டளவில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் இன்னும் 1000-க்கும் கீழ் வரவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முதலில் ஒத்தி வைக்கப்பட்டன. பின் அதற்கான தேதி அறிவிக்கப்பட்டபோது கடும் எதிர்ப்பு வந்ததும் நீதிமன்றம் தலையீட்டாலும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, முழு தேர்ச்சி அளிக்கப்பட்டன.

‘தேர்வுகள் அவசியம்’ மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இந்திய அளவிலும் கல்லூரிகளில் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவெடுத்தாலும் பல மாநிலங்களில் தேர்வுகள் நடத்த முடியாத நிலைமையே இருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் உள்ளது. தேசிய அளவிலான ஆசிரியர் தேர்வான CTET இம்மாதம் முதல் வாரத்தில் நடைபெறுவதாக இருந்ததும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. கர்நாடகாவில் நடந்த பள்ளித் தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்குக் கொரோனா தொற்றாகி பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இத்தனை சிக்கல்கள் இடையே தேர்வுகளை நடத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும் என கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தேர்வுகள் அவசியம் எனத் தெரித்துள்ளர்.

‘தேர்வுகள் அவசியம்’ மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாணவர்களுக்கு உடல்நலன், ஆரோக்கியம் உள்ளிட்டவை முக்கியம். அதேபோல மாணவர்களுக்கான வேலை வாய்ப்பும் வருங்கால வளர்ச்சியும் முக்கியம். எந்தவிதமான கல்வி முறையாக இருந்தாலும் சரி மாணவர்கள் எவ்விதம் கற்றுள்ளார்கள் என்பதை மதிப்பீடு செய்வது அவசியம். அதற்கான தேர்வுகளில் மாணவர்கள் எழுதும் விதமே அவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். நம் மாணவர்களை உலக அளவில் எல்லோரும் ஏற்றுக்கொள்வதற்கு அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.