முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா!

 

முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் கூட குறைந்தபாடில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசால் பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு வந்தாலும் சிலர் அதை உணராமல் வெளியில் சுற்றி திரிந்து வருகின்றனர்.

முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா!

கொரோனா தொற்றால் முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், குணமடைந்தும் வருகின்றனர். சிலரின் உயிரையும் இந்த கொரோனா எனும் கொடிய அரக்கன் பறித்து கொண்டு போயுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா!

இந்நிலையில் மயிலாடுதுறை சீர்காழி அதிமுக எம்எல்ஏ பி.வி. பாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி பரிசோதனை மேற்கொண்ட நிலையில் எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.