கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!

தமிழகத்தில் முதற்கட்டமாக கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது. ஆனால் நாளாக நாளாக தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை க்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 112 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் பொதுமக்கள் அங்கு சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது.

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!

ஆனால் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதாவது நாள் ஒன்றுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுக்காக ரூபாய் 15,000 கட்டணம் வசூலிக்கலாம் அதேபோல் லேசான அறிகுறியுடன் வருபவர்களுக்கு ரூபாய் 1500 கட்டணம் என்றும் தொற்று அறிகுறி இல்லாமல் சிகிச்சை பெற வருபவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் கட்டணம் எனவும் அவர் அறிவித்தார். அதிகபட்சமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரித்திருந்தார்.

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!

இந்நிலையில் அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. அதாவது குறிப்பிட்ட அந்த நபரிடமிருந்து சுமார் ரூ. 7 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!
முன்னதாக வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் – Bewell தனியார் மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.