கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!

 

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தமிழக அரசின் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மொத்தமாக 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வரும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் தலைமை மேற்பார்வையாளருக்கும் கொரோனா உறுதியானது.

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!

இது குறித்து பேசிய மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் பலருக்கு கொரோனா இருப்பதாகவும் அதனை மருத்துவமனை நிர்வாகம் மறைப்பதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கீழ்ப்பாக்கம் மனநல காப்பாகத்தில் இருக்கும் அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு 31 பேருக்கு கொரோனா உறுதியானதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.