சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி!

 

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தமிழக அரசின் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மொத்தமாக 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில், மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வரும் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் தலைமை மேற்பார்வையாளருக்கும் கொரோனா உறுதியானது.

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி!

இது குறித்துப் பேசிய காப்பக ஊழியர்கள், காப்பகத்தில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மையான பாதிப்பை வெளியிடாமல் மறைக்கின்றனர் என்றும் ஊழியர்களுக்கு முழு பாதுகாப்பு கவச உடை வழங்காமல் வெறும் மாஸ்க் மற்றும் கை உறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்து வார்டுகள் மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் பலருக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.