ரயில்வே பாலத்தில் இருந்து குதித்து, கொரோனா நோயாளி தற்கொலை!

 

ரயில்வே பாலத்தில் இருந்து குதித்து, கொரோனா நோயாளி தற்கொலை!

சேலம்

சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரி ரயில்வே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மல்லம்பட்டி மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் தங்வேல் (60). உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்பட 6 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தங்கவேலுவுக்கு உடல்நல குறைவு ஏற்படவே, பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

ரயில்வே பாலத்தில் இருந்து குதித்து, கொரோனா நோயாளி தற்கொலை!

இதனால், அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மருந்து, மாத்திரைகளை வழங்கி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும்படி மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார். அதன் படி வீட்டில் தனிமையில் இருந்து வந்த தங்கவேலு, விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றார்.

அவரது மகன்கள் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றபோது, சூரமங்கலம் ரெட்டிப்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தில் இருந்து குதித்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.